போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றும் நோக்கில், ராஜபாளையம் அரசு நூலகத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (Water Purifier) நிறுவப்பட்டது.
நூலகத்தில் படிக்கும் மாணவர்கள் முன்பு வைத்த கோரிக்கையின்படி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியிருந்தனர். இதனை அடுத்து, மாணவர்களின் கல்வி ஆர்வம் குன்றாதிருக்க அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மேனாள் வட்டாட்சியர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஆறு மாதங்களுக்கு குடிநீர் கேன் வாங்க பண உதவி செய்திருந்தார்.
இந்த முயற்சியை மேலும் நிலைநிறுத்த, தற்போதைய குடிமைப்பொருள் வட்டாட்சியர் திரு. ஆனந்தராஜ் அவர்கள், நூலகத்திற்கு நிரந்தரமான குடிநீர் வசதி அமைக்க ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க, பெருந்தன்மை கல்விமேம்பாட்டு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கினார்.
அந்நன்கொடையின் மூலம் வாங்கப்பட்ட புதிய நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நூலகத்தில் 02.01.2026 அன்று பொருத்தப்பட்டது. இந்த வசதியின் தொடக்க நிகழ்வினை மேனாள் வட்டாட்சியர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மேற்பார்வையிட்டு, மாணவர்களின் கல்வித் தேவைகளை முழுமையாக ஆதரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த முயற்சியால், இனி நூலகத்தில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தூய்மையான குடிநீரை எளிதாகப் பெற்று, தங்கள் கல்விப் பணியில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments