பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை 17.07.2024 அன்று தொடங்கப்பட்டது. இதன் தலைவராக க.அழகர், செயலாளர் ப.சிவகுமார், பொருளாளர் இரா.காளீஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டனர். அறக்கட்டளை தொடங்கிய பிறகு பல்வேறு செயல்பாடுகளை செய்துவருகிறோம் அவற்றில் சில செயல்பாடுகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
அறக்கட்டளையின் செயல்பாடுகள்:
1. தமிழ் அறிஞர்களை உருவாக்குதல்
2. தமிழ் மொழி உணர்வினை வளர்ப்பது
3. கல்வியறிவு அற்றவர்களுக்கு எழுத்தறிவு பயிற்றல்
4. எழுத்தர்களையும், சிற்றிதழ்களையும் ஊக்குவித்தல்
5. அரசு கிளை நூலகத்தில் சிறுகதை,கவிதை,கட்டுரை,பேச்சாற்றல் பயிற்சி வகுப்புகள்
6. மாணவர்களின் திறனறிவை ஊக்குவிக்க சன்மானம்,பாராட்டு சான்றிதழ் வழங்குதல்
7. ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்
8. கல்விதொடர்பான கருத்தரங்கம்,ஆய்வரங்கம் மாநாடு நடத்துதல்
9. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துதல்
10. ஆதரவற்ற முதியோர்களை பாதுகாத்தல்