Hot Posts

6/recent/ticker-posts

323-வது மாத இலக்கிய கூட்டம் - திருக்குறள் திறனாய்வு



29.12.2025 அன்று இராஜபாளையம் அரசு பொதுநூலகமும் பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 323-வது மாத இலக்கிய ஆய்வுத்தளம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைவராக மேனாள் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களும், நூலகர் சண்முகவேல் அவர்க்ளின் வரவேற்புடன், "வள்ளுவரின் கடவுள் கோட்பாடு" என்ற தலைப்பில் சிந்தனை தமிழன் ஆசிரியர்  சிவகுமார் அவர்களும், வள்ளுவரின் வாழ்வியல் விழுமியங்கள் என்ற தலைப்பில் மேனாள் மாவட்ட கல்வி அலுவலகர் முனைவர்.பொன்னம்பலம்மும், வள்ளுவர் காட்டும் சமுதாயம் என்ற தலைப்பில் பேராசியர் முனைவர் க.அழகர் (வாசகர் வட்ட தலைவர்) அவர்களும், வள்ளுவர் காட்டும் வாய்மை என்ற தலைப்பில் கவிஞர் காளீஸ்வரன்  (பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை பொருளாளர்) அவர்களும் உரைநிகழ்த்த மேனாள் BSNL பொறியாளர் வாழ்த்துரை வழங்க நூலகர் சங்கரி அம்மாள் நன்றியுரையுடன் நிறைவு செய்தார். விழாவானது பழைய யூனியன் அலுவலக கட்டிடத்தில் இனிதே  நடைபெற்றது. 




Post a Comment

0 Comments