29.11.2025 அன்று இராஜபாளையம் பொதுநூலகத்தில் வைத்து பெருந்தன்மை கல்விமேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் இராஜபாளையம் வாசகர் வட்டம் நடத்திய பாராட்டு விழா நடைபெற்றது.அதில் ராஜபாளையம் குழந்தைகள் நூலகத்தின் நூலகர் திருமதி.முத்துலட்சுமி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த வாசகர் வட்ட அமைப்பிற்கான விருதும் , கிருஷ்ணாபுரம் கிளை நூலகத்தின் நூலகர் திருமதி.அனிதா அவர்களுக்கு தமிழ்நாடுஅரசு நல்நூலகர் விருதும் பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட நூலக ஆய்வாளர் மலர்வேந்தன் தலைமைவகித்தார். வாசகர் வட்ட தலைவர் முனைவர் க.அழகர் முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட நூல் இருப்பு சரி பார்ப்பு அலுவலர் கிரகாம் துறை வாழ்த்துறை வழங்கினார். சிந்தனை தமிழன் ஆசிரியர் சிறப்புரையாற்றினார். நகராட்சி ஆதரவற்றோர் பொறுப்பாளர் இரா.காளீஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். நூலகர் சண்முகவேல் அனைவைரையும் வரவேற்றார். நூலகர் சங்கரியம்மாள் நன்றியுரை கூறினார்.விழாவில் ராஜபாளையம் வட்ட கிளை நூலக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புச்செய்தனர்.

Comments
Post a Comment