Hot Posts

6/recent/ticker-posts

இலக்கியத் திருவிழா -2016 போட்டிக்கான முடிவுகள்

 


இலக்கியத் திருவிழாவிற்ககு அனுப்பப்பட்ட கவிதைகள்  பதினேழு , சிறுகதை எட்டுகட்டுரை ஒன்பது.இவைகள் அனைத்தையும் மூதறிஞர் மிடாலக் கவிஞர் பொன்.செல்வராசு அய்யா அவர்களிடம் தேர்வு செய்ய வழங்கி இருந்தோம்.தேர்வு செய்த விதத்தையும் தேர்வுக்கான காரணத்தையும் அய்யா கூறி இருந்தார் அய்யாவின் தேர்வு கடிதத்தில் இருந்து....

"கவிதை,சிறுகதை,கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுக்குரியவர் அரிதில் முயன்று தேர்வு செய்துள்ளோம். கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை திருத்தி மீண்டுமாய் எழுதியுள்ளேன். முதற் பரிசுபெற்ற கவிதை உரைநடை கவிதையாகினும் சிறப்பாக உள்ளது.
சிறுகதைகள் விளைச்சலின் இரகசியம் ,மனிதாபிமானம் கதைகளை வேறுவழி இன்றி முற்றிலுமாய் மாற்றியுள்ளேன்.பணி ஆணை சிறந்த கதையாகினும் சிறுகதை இலக்கணம் சற்று சிதைவுபட்டுள்ளமையால் அதனை திருத்தும் செய்து மீண்டும் எழுதியுள்ளேன்.இயற்கை  என்ற கதை நன்கு உள்ளது.ஆயினும் பெண்மை எல்லா அம்சங்களும் சிறந்துள்ளது. பெண்மை என்ற கதையை எழுதியவரை பாராட்டாமல் இருக்க முடியாது. இன்றய சூழலுக்கு தேவையான ஒரு கதை!
கட்டுரைகள் யாவும் சிறப்பாக உள்ளது இருபினும் சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்ய கடினமாக இருந்தாது. குறிப்பாக தமிழனின் கலாச்சாரம் மற்றும் வள்ளுவரின் உழவு இந்த இரண்டு கட்டுரைகளில் சிறந்த கட்டுரையை தேர்வு செய்ய ஒரு விவாதமே செய்ய வேண்டியாற்றி.  சில கட்டுரைகள் கட்டுரைக்கான வடிவில் ல்லையெனினும் அவற்றை திருத்தி மாற்றி அமைத்துள்ளேன். வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!"
இவ்வாறு அவரின் கடிதத்தில் குறிப்பிடிருந்தார் .
அய்யா அவர்களின் தேர்வின் படி முதல் பரிசு பெற்றவர்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளோம். வெற்றியாளர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும்  கவிஞன் பதிப்பகம் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்!

கதை  போட்டியில் வெற்றி பெற்றவர்- 

த.முத்து செல்வி சாரா தக்கர் கல்லூரி 

 

கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்- 

செ.மீனா பிர்தா எஸ்.எப்.ஆர் கல்லூரி 

 

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்-

பெ.பெனிற்றா மெர்லின் க்ரேஸ் சாரா தக்கர் கல்லூரி  


 போட்டியில் பங்கேற்ற படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் சமுதாய மாற்றம் தேடியுள்ளனர். எனினும் இளம் பருவத்தில் சமூகச் சிந்தனை தோன்றுவது என்பது அரிதான செயல்தான். இவர்களின் படைப்புகள் "மாரியாய் மாறிய பனித்துளி" நூலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலில் இடம் பெற்றுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் சமூக சிந்தனைமக்கள் புரட்சி , கல்விச் சிந்தனைகள் ,  சமுதாய மாற்றம் போன்ற கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 

Post a Comment

0 Comments