Hot Posts

6/recent/ticker-posts

இராஜபாளையத்தில் முதியவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா

 இராஜபாளையம், ஆக.16:

நூலகத் தந்தை சீர்காழி இரா.அரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு, பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக முதியவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழா இராஜபாளையம் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக, அந்த மாதத்திற்கான சிற்றுண்டி மொத்தமாக முதியோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. விழாவில், முதுமைக் காலத்தில் புத்தகங்கள் எவ்வாறு நமக்கு உற்ற துணையாக இருக்கும் என்பது குறித்து பெருந்தன்மை அறக்கட்டளை தலைவர் முனைவர் க.அழகர், சிந்தனை தமிழன் ஆசிரியர் சிவகுமார், கவிஞர். இரா.காளீஸ்வரன்  ஆகியோர் முதியவர்களுடன் சிறிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments