Hot Posts

6/recent/ticker-posts

இராஜபாளையம் அரசு நூலகத்தில் 327-வது மாத இலக்கிய கூட்டம்

 


இராஜபாளையம், ஜூன் 27, 2026: இராஜபாளையம் அரசு நூலகத்தில் 327-வது மாத இலக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு நூலகர் சண்முகவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்ட பொருளாளர் இரா. காளீஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார்.இக்கூட்டத்தில் நான்கு பேர் சிறப்புரை ஆற்றினர். 

வாசகர் வட்ட தலைவர் முனைவர். க. அழகர் "இலக்கியங்களில் நாட்டுப்பற்று" என்ற தலைப்பிலும், 

வாசகர் வட்ட செயலாளர் புலவர். ப. சிவகுமார் "யாரோ ஒருவன் அல்ல நம்பியவனே" என்ற தலைப்பிலும், 

மேனாள் மாவட்ட கல்வி அலுவலர் முனைவர். பொன்னம்பலம் "புதுக்கவிதைகளில் சமுதாய சிந்தனைகள்" என்ற தலைப்பிலும், 

BSNL பொறியாளர் பொன்ராஜ் "இல்லறத்தில் சிறப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.கூட்டத்தின் நிறைவில் சங்கரியம்மாள் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments