இராஜபாளையம், ஆக.15:
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முச்சக்கர சைக்கிள் வழங்கும் விழா சத்திரப்பட்டியில் உள்ள வள்ளலார் தர்மசாலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் தாசில்தார் ஆனந்தராஜ் ஆகியோர் முச்சக்கர வண்டிகளை கொடையாக வாங்கி பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதில் காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் பாண்டியம்மாள் மற்றும் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சூரியகுமார் மகள் முத்துலட்சுமி ஆகியோர் பயனாளிகளாக வண்டிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வள்ளலார் தர்மசாலை தலைவர் பாலு, சிந்தனை தமிழன் ஆசிரியர் சிவகுமார், நவநீத கிருஷ்ணம்மாள், எலக்ட்ரீசியன் சஞ்சீவி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments