இராஜபாளையம், ஆக.14:
நூலகவியலின் தந்தை என போற்றப்படும் சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாள் விழா பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக இராஜபாளையம் அரசு பொது நூலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு சிந்தனை தமிழன் ஆசிரியர் சிவகுமார் தலைமை தாங்கினார். நூலகர் சண்முகவேல் வரவேற்புரை ஆற்றினார். துணை நூலகர் சங்கரேஸ்வரி முன்னிலை வகித்தார். அரசு குழந்தைகள் நூலகர் முத்துலட்சுமி , மேனாள் மாவட்ட கல்வி அலுவலர் பொன்னம்பலம் மற்றும் ஆதரவற்றோர் இல்ல பொறுப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, டாக்டர் இரா.அரங்கநாதன் அவர்களின் நூலக தத்துவங்கள் மற்றும் ஐந்து விதிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் இராஜபாளையம் வாசகர் வட்ட உறுப்பினர்கள், அரசு பொது நூலகத்தில் பயிலும் போட்டித் தேர்வு பயிற்சி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments