Hot Posts

6/recent/ticker-posts

இராஜபாளையத்தில் 325-வது மாத இலக்கிய கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


இளைஞர்களின் வாழ்க்கை போராட்டமா அல்லது பூந்தோட்டமா என்ற கேள்விக்கு விடை காணும் விதமாக, இராஜபாளையம் கிளை நூலகமும் பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையும்  இணைந்து நடத்திய 324-வது மாத இலக்கியத் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 11.00 மணிக்கு பழைய யூனியன் அலுவலகக் கட்டடத்தில் உள்ள பட்டி மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, மேனாள் வட்டாட்சியர் திரு. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நூலகர் திரு. சண்முகவேல் அனைவரையும் வரவேற்று, இலக்கியத் தளத்தின் தொடர்ச்சியான பயணத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சிந்தனைத் தமிழன் இதழின் ஆசிரியர் புலவர் ப. சிவகுமார் மற்றும் மேனாள் துணை ஆட்சியர் திரு. எஸ். ஆதிநாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், இலக்கியத்தின் அவசியம் குறித்தும் அவர்கள் வாழ்த்துரையில் சிறப்பித்துக் கூறினர்.


வாசகர் வட்டம் மற்றும் பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. அழகர், 'இன்றைய இளைஞர்களுக்கு வாழ்க்கை போராட்டமே! பூந்தோட்டமே..!' எனும் தலைப்பிலான சொற்பொழிவுக்கு நடுவராக செயல்பட்டு, கருத்தரங்கை வழிநடத்திச் சென்றார்.


இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை பூந்தோட்டமே என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் பொன்னம்பலம் , தனது பேச்சில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் நவீன காலப் போராட்டங்களையும், அதே நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் நிறைந்த பூந்தோட்டத்தையும் குறித்து தெளிவாக விளக்கினார்.


இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை போராட்டமே என்று அவர்களின் அன்றாட வாழ்வின் சிக்கல்களை தெளிவாக எடுத்து கூறி தனது வாதங்களை எடுத்தது வைத்தார்  நூலாகர் ரெங்காதேவி.


இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை பூந்தோட்டமே  என்ற தலைப்பில் உரையாற்றிய கவிஞர் பொறி. பொன்ராஜ் (பி.எஸ்.என்.எல்) அவர்கள் போராட்டங்கள் பூந்தோட்டமாக மாற்றும் வலிமை இளைஞர்களுக்கு இருக்கிறது என்று எதிர்வாதங்களை மீண்டும் வைத்தார்.

இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டு ரசித்தனர். நிறைவில், நூலகர் திருமதி ரா. சங்கரியம்மாள் நன்றியுரை கூற, நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இந்த மாதாந்திர இலக்கிய நிகழ்ச்சியை 'சிந்தனைத் தமிழன்' (இருதிங்களிதழ்) ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.








Post a Comment

0 Comments