Skip to main content

Posts

பஞ்சாயத்து பள்ளியை மேம்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டு விழா

  முகவூர் பஞ்சாயத்து பள்ளியின் கட்டிடங்களை மேம்படுத்த கடினமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செய்து அதற்காக அரும்பாடுபட்டு அரசின் துணை கொண்டு மேம்படுத்திய திரு.அண்ணாதுரை அவர்களை பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா 19.12.2024 அன்று நடத்தப்பட்டது. உடன் அறக்கட்டளை தலைவர்.திரு.க.அழகர், பொருளாளர் திரு.காளீஸ்வரன், சிந்தனை தமிழன் ஆசிரியர் திரு.சிவகுமார் மற்றும் மேனாள் துணை ஆட்சியர் திரு.ஆதிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்..
Recent posts

போட்டித்தேர்வுக்கு ஒருநாள் இலவச பயிற்சி பட்டறை

  24.09.2025 அன்று பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக TNPSC,TET,UPSC,Railway போன்ற தேர்வுகளுக்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு, இராஜபாளையம் அரசு பொதுநூலகத்தில் (பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம்) முனைவர்.பி.கோபால் (டி மாரியப்பன் நாடார் முத்துக்கனி  அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - முதல்வர்) மாணவர்களுக்கு ஒருநாள் இலவச  சிறப்பு பயிற்சி பட்டறை நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சி முடிவில் தேனீர் விருந்துடன் நிறைவு பெற்றது.

அஞ்சல் கிராம சபைக் கூட்டம்

  07.10.2025 அன்று  அஞ்சல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரவேற்புரை P.கதிரவன் (cash over seer) co நிகழ்த்தினார், நிகழ்ச்சிக்கு பி.பிரேமா போஸ்ட் மாஸ்டர் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் ப.சிவகுமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அரசின் திட்டங்கள், அஞ்சலக சேமிப்புத் திட்டம், காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவை, துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.  மேலும், பொதுமக்களுக்கு சேமிப்புக் கணக்கு, பள்ளிக் குழந்தைகளுக்கு தபால் சேமிப்புக் கணக்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், தபால் ஆயுள் காப்பீடு, ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல் போன்ற நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் தலைமை போஸ்ட் மாஸ்டர் D.செல்வராஜ் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காளி சரண்யா (கரெஸ்பாண்டெண்ட் கிளெர்க் ).

முதியோர் கல்வி

 26.03.2025 அன்று முதியோர்களுக்கு எழுத்து பயிற்சி, அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளை தலைவர் முனைவர் க.அழகர், செயலாளர் புலவர் ப.சிவகுமார், பொருளாளர் கவிஞர்.இரா.காளீஸ்வரன் ஆகியோர் நடத்தி எழுத்து பயிற்சி வழங்கினர். பயிற்சியில் கலந்துகொண்ட முதியவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக நோட்டுகள், எழுதுபொருள் வழங்கி பயற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் முதியவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அவர்களின் ஆர்வத்தை பார்த்த பேராசிரியர் இருவரும் பாராட்டு தெரிவித்து ஊக்கமளித்தனர். பயிற்சிக்கு பிறகு அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.

சைல்டுலைன் விழிப்புணர்வு பிரச்சாரம்

  28.12.2024 அன்று பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் பொருளாளர் இரா.காளீஸ்வரன் சைல்டுலைன் விழிப்புணர்வு திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை இராஜபாளையம் ரயில் நிலையத்தில் செய்தார். இந்நிகழ்வில் ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.