தினகரன் செய்தி குறிப்பு (மதுரை| 22.11.2025)
ராஜபாளையம் பழைய ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அரசு சார்பில் நடத்தப் படும் முழுநேர நூலகத்தில் 58வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. முன்னாள் துணை ஆட்சியர். ஆதிநாராயணன் தலைமை வகித்தார், நூலகர் சண்முக வேல் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் அழகர், செயலாளர் சிவகுமார், பொருளாளர் காளீஸ்வரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்னம்பலம், பொன்ராஜ், ரகுபதி சிறப்புரை ஆற்றினர். நூலகத்தின் புரவலராக ஆசிரியர் செல்வராஜ் ரூ.1000 செலுத்தினார். தொடர்ந்து வாழ்வை உயர்த்தும் நூலகம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியில் மாணவர் விக்னேஷ் முதல் பரிசு, சான்றிதழ், நவில்தோறும் நூலகம் என்ற கவிதை போட்டியில் செந்தில் நாராயணன் முதல் பரிசு, சான்றிதழ்,பாலசரவணன் இரண்டாம் பரிசு. சான்றிதழ் பெற்று கொண்டனர். இதில் நூலகர்கள் ராஜகுரு, குருநாதன், சரஸ்வதி, முத்துலட்சுமி, சந்திரகலா, ரங்கா தேவி, மைதிவான் பிவி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நூலகர் சங்கரி அம்மாள் நன்றி கூறினார்.
Comments
Post a Comment