07.10.2025 அன்று  அஞ்சல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வரவேற்புரை P.கதிரவன் (cash over seer) co நிகழ்த்தினார், நிகழ்ச்சிக்கு பி.பிரேமா போஸ்ட் மாஸ்டர் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் ப.சிவகுமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அரசின் திட்டங்கள், அஞ்சலக சேமிப்புத் திட்டம், காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவை, துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 
மேலும், பொதுமக்களுக்கு சேமிப்புக் கணக்கு, பள்ளிக் குழந்தைகளுக்கு தபால் சேமிப்புக் கணக்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், தபால் ஆயுள் காப்பீடு, ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல் போன்ற நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான தகவலை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் தலைமை போஸ்ட் மாஸ்டர் D.செல்வராஜ் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காளி சரண்யா (கரெஸ்பாண்டெண்ட் கிளெர்க் ).
Comments
Post a Comment